ரஜினி மகள் திருமணம்: சோனியா வருகிறார்

http://thatstamil.oneindia.in/img/2010/07/08-soundarya-rajini-ashwin-kum.jpg

ரஜினிகாந்த்தின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த்தின் திருமணத்திற்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி போன்ற அகில இந்தியத் தலைவர்கள் வரவுள்ளனராம்.

செளந்தர்யாவுக்கும், சென்னையைச் சேர்ந்த கட்டுமானத் துறையில் இருக்கும் அஸ்வினுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த திருமணம் செப்டம்பர் 3ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகின்றன.

திருமணத்திற்காக ராணி மெய்யம்மை மண்டபம் மற்றும் ராஜா முத்தையா மண்டபம் ஆகியவை புக் செய்யப்பட்டுள்ளன.

விரைவில் திருமணப் பத்திரிக்கையைக் கொடுக்கும் வேலையில் ரஜினி தம்பதிகள் இறங்கவுள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரையும் திருமணத்திற்கு அழைக்க முடிவாகியுள்ளதாம.

அதேபோல ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரேவும் திருமணத்திற்கு வருகிறாராம். இதுதவிர மத்திய, மாநில அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் என நாட்டின் பல முன்னணிப் பிரபலங்கள் கல்யாணத்திற்கு வரவுள்ளனர்.

நடிகர் அமிதாப் பச்சன் தனது மனைவி ஜெயாபச்சன், மகன் அபிஷேக், மருமகள் ஐஸ்வர்யா ராயுடன் குடும்ப சகிதமாக கலந்து கொள்கிறார்.

திருமண நிச்சயதார்த்தத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, மனைவியுடன் நேரில் சென்று அழைத்திருந்தார் ரஜினி. ஆனால் ஜெயலலிதா வரவில்லை. திருமணத்திற்கு அவர் வரலாம் என்று தெரிகிறது.

திருமணத்திற்குப் பிறகு செளந்தர்யா, தனது கணவருடன் தனிக்குடித்தனம் போகவுள்ளார். இதற்காக சேத்துப்பட்டில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு தயாராகி விட்டது.

Comments

Most Recent