குடும்பத்தை களங்கப்படுத்துவதா?காவ்யா மாதவனுக்கு கணவர் வக்கீல் நோட்டீஸ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தனது குடும்பத்தை பற்றி அவதூறாக பேசிய, நடிகை காவ்யா மாதவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவரது கணவர் நிஷால் சந்திரா வக்கீல் நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.தமிழ், மலையாளத்தில் நடித்து வரும் காவ்யா மாதவனுக்கும் துபாயில் பணியாற்றும் நிஷால் சந்திராவுக்கும் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 5&ம் தேதி திருமணம் நடந்தது. பிறகு மணமக்கள் துபாய் சென்றனர். சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக காவ்யா கேரளாவுக்கு திரும்பி வந்தார். கணவருடம் பிரிந்து வாழும் காவ்யா இன்னும் விவாகரத்து வாங்கவில்லை.
இந்நிலையில், நிஷால் சந்திரா திருவனந்தபுரத்தில் உள்ள வக்கீல் மூலம் காவ்யா மாதவனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், தன்னையும் தன் குடும்பத்தை பற்றியும் காவ்யா அவதூறான கருத்துகளை மீடியாவில் தெரிவித்து வருகிறார். இது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவ்யா பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால், அவர் மீது சட்டப்படி நடிவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறப்பட்டுள்ளது.

Comments

Most Recent