ராசு மதுரவனின் முத்துக்கு முத்தாக

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பாண்டியநாடு தியேட்டர்ஸ் சார்பில் தயாராகும் படம், 'முத்துக்கு முத்தாக'. இதில் விக்ராந்த், ஹரீஷ், நட்டு, வீரசமர், சிங்கப்புலி, ஜெகன்நாத், ஓவியா, மோனிகா உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, யு.கே.செந்தில்குமார். இசை, கவிபெரியதம்பி. கதை, திரைக்கதை, வசனம் எழுதி ராசு மதுரவன் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது, "பாண்டி', 'மாயாண்டி குடும்பத்தார்', 'கோரிப்பாளையம்' படங்களின் பாணியிலிருந்து இது வேறுபட்டிருக்கும். எல்லோரும் இருந்தும், வயதான பிறகு அனாதையாக இறப்பது கொடுமையிலும் கொடுமை. இவ்விஷயத்தை நெகிழ்ச்சியான சம்பவங்களுடன் சொல்கிறேன்" என்றார்.

Comments

Most Recent