பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் நடிக்கும் 'அவன் இவன்' படத்தின் ஷூட்டிங் படு வேகமாக நடந்து வருகிறது. தொடர்ந்து குற்றாலம், செங்கோட்டை...
பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் நடிக்கும் 'அவன் இவன்' படத்தின் ஷூட்டிங் படு வேகமாக நடந்து வருகிறது. தொடர்ந்து குற்றாலம், செங்கோட்டை பகுதிகளில் ஷூட்டிங் நடக்கிறது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்குமாறு சூர்யாவிடம் சொன்னாராம் பாலா. சில தினங்கள் மட்டுமே கால்ஷீட் தேவைப்பட்டதால், உடனே ஒப்புக் கொண்டாராம் சூர்யா. இப்போது, சமீபத்தில் இப்படம் குறித்து பாலா பேட்டி அளித்தபோது, அவன் விஷால் என்றும், இவன் ஆர்யா என்றும் கூறினார். இதில், விஷால் திருநங்கை வேடத்தில் நடிப்பதாக வெளியாகியுள்ளன. விஷாலின் திருநங்கை வேடம் பற்றிய தகவல் வெளியாகி விடாமல் ரகசியமாக வைத்திருந்தனர். தற்போது வெளியே கசிந்து விட்டது. முன்னணி கதாநாயகனாக இருக்கும் விஷால் திருநங்கை வேடத்தில் நடிக்க எப்படி சம்மதித்தார் என்று திரையுலக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
Comments
Post a Comment