எந்திரன் ஆந்திரா ரூ 33 கோடி, கர்நாடகா ரூ 9.5 கோடி!

http://600024.com/popcorn/files/2010/07/endhiran-exclusive-stills-08.jpg

ரஜினியின் எந்திரன் (ரோபோ) படத்தின் ஆந்திர உரிமை இறுதியாக ரூ 33 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

கர்நாடகத்தில் நேரடி தமிழ்ப் படமாகவே வெளியாகும் எந்திரனுக்கு ரூ 9.5 கோடி விற்பனை உரிமை விலையாகத் தரப்பட்டுள்ளது.

இந்த இரு மாநிலங்களிலுமே, எந்திரன் விற்பனை புதிய சரித்திரம் படைத்துள்ளது.

ஆந்திராவில் இந்தப் படம் ரூ 30 கோடிக்கு விற்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அது மோசடியாகத் தயாரிக்கப்பட்ட பத்திரம் மூலம் சிலர் செய்த சதி என சன் பிக்சர்ஸ் அறிவித்து சம்பந்தப்பட்டவர்களை சிறைக்கு அனுப்பியது.

இப்போது சன் பிக்ஸர்ஸ், ரோபோ தெலுங்குப் பட உரிமையை ரூ 33 கோடிக்கு விற்பனை செய்துள்ளது.

கர்நாடக மாநில உரிமைக்கு ரூ 10 கோடி வரை சன் பிக்சர்ஸ் கேட்டு வந்தது. இறுதியில் ரூ 9.5 கோடிக்கு முடிந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தமிழ்ப் படம் ஒன்று இந்த விலைக்கு விற்கப்படுவது இதுவே முதல்முறை. அந்த மாநிலத்தைப் பொறுத்தவரை ஒரிஜினல் கன்னடப் படத்தின் பட்ஜெட்டே இதில் மூன்றில் ஒரு பங்கு கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

ரோபோ இந்திப் பட உரிமை விலை பற்றி இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. இதன் ஆடியோவை மட்டும் வீனஸ் ரெக்கார்ட்ஸ் மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது. இன்று சனிக்கிழமை இரவு மும்பையில் ரோபோ ஆடியோவை வெளியிடுகிறார் அமிதாப் பச்சன்.

Comments

Most Recent