கமலுக்கு பாராட்டு விழா மலையாள நடிகர்கள் கலந்துகொள்ள வேண்டும்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நடிகர் கமல்ஹாசனுக்கு நடக்கும் பாராட்டு விழாவில், மலையாள நடிகர்
சங்கத்தினர் கலந்துகொள்ள வேண்டும் என்று விழா கமிட்டித் தலைவர் சிவன்குட்டி
எம்.எல்.ஏ கூறினார்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள அரசு சுற்றுலாதுறை
சார்பில், வருடம் தோறும் ஓணம் சுற்றுலா வார விழா கொண்டாடப்படும். இந்த
வருடம் வரும் 22&ம் தேதி இவ்விழா தொடங்குகிறது. திருவனந்தபுரம்
சந்திரசேகரன் நாயர் ஸ்டேடியத்தில் நடக்கும் இவ்விழாவில் கமல்ஹாசனுக்கு
பாராட்டு விழா நடத்த கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு மலையாள நடிகர்
சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அச்சங்கத்தின் தலைவர் இன்னொசன்ட்
கூறும் போது, 'கமல்ஹாசன் சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
மலையாளத்திலேயே 50 வருடங்கள் சினிமாவில் பணியாற்றியவர்கள் இருக்கும் போது
ஏன் கமல்ஹாசனுக்கு விழா நடத்த வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இந்நிலையில்,
விழா கமிட்டி தலைவரும் எம்.எல்.ஏவுமான சிவன்குட்டி, நிருபர்களிடம்
கூறுகையில், 'கமல்ஹாசன் சினிமா துறையில் பல்வேறு சாதனைகளை படைத்தவர். அவர்
நடிக்க வந்து 50 ஆண்டுகள் ஆகிறது. அதனால் அவரை கவுரவிக்க அரசு
தீர்மானித்துள்ளது. 22ம் தேதி காலையில் அரசு சார்பில், விமான நிலையத்திலேயே
அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட இருக்கிறது. மாலையில் நடக்கும்
விழாவில் முதல்வர் அச்சுதானந்தன் அவரை கவுரவிக்கிறார். இது தொடர்பாக கடந்த
வாரம் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மலையாள நடிகர் சங்கம் சார்பில் யாரும்
கலந்து கொள்ளவில்லை. பாராட்டு விழாவில் மலையாள நடிகர்கள் அனைவரும்
கலந்துகொள்ளவேண்டும். அதுதான் நாகரிகமாக இருக்கும்' என்றார்.

Comments

Most Recent