எந்திரன் டீலிங்கும் சம்பளக்கணக்குகளும் !


ரஜினி நடிக்க வந்து இத்தனை ஆண்டுகளில் சம்பளம் வாங்காமல் நடிக்கும் படம் 'எந்திரன்'. ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமான உடனே சம்பளத்தில் 50 சதவீதம் அட்வான்ஸாக வாங்கிவிடுவதுதான் ரஜினியின் பழக்கம்.

பிறகு டப்பிங் பேசி முடித்ததும் முழு தொகையும் தரப்படும். எந்திரனுக்கு நடந்தது அப்படியல்ல. படம் வெளியான பிறகு சம்பளத்தை வாங்கிக்கொள்வதாக ரஜினி சொன்னதாக பாடல் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் தெரிவித்தார். ஆனால் இதன் பின்னணியில் இருக்கும் டீலிங்கே வேற என்கின்றனர் கோடம்பாக்க புள்ளிகள்.

ரஜினியின் தற்போதைய சம்பளம் இருபது கோடி. ஆசியாவிலேயே ஜாக்கிசானுக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்குவது ரஜினிதான். எந்திரனை தயாரிக்க சன் பிக்சர்ஸ் முடிவெடுத்தபோது ரஜினியிடம் கலாநிதி கேட்ட முதல் கேள்வி உங்க சம்பளம் எவ்வளவு? என்பதுதான். அப்போதுதான் ரஜினி தனது டீலிங்கை சொல்லியிருக்கிறார்.

இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம் இது. நீங்க போடும் முதலைவிட அதிகம் லாபம் கொடுக்கும் படம். என்னோட கணிப்பு தப்பாச்சுன்னா என் சம்பளத்தில பாதி கொடுத்தா போதும். சொன்னபடி நடந்தா இதுவரை நான் வாங்கிய சம்பளத்திலேயே எந்திரனுக்குதான் அதிகமா இருக்கணும்' என்று ரஜினி சொல்லியிருக்கிறார். கலாநிதிக்கும் ரஜினியின் டீலிங் பிடித்திருந்ததால் அதற்கு ஓ.கே சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது.

பாடல் வெளியீட்டு விழாவுடன் சேர்த்து படத்திற்கு இதுவரை 158 கோடி ரூபாய் செலவானதாக கூறப்படுகிறது. எல்லா ரைட்ஸுகளையும் சேர்த்து 100 கோடி ரூபாய் கலெக்‌ஷன் பார்த்துவிடலாம் என்கிறார்கள். பாடல் வெளியீட்டு விழா ஒளிபரப்பியதன் மூலம் கிடைத்த விளம்பர வருவாய் பல கோடி என்கிறார்கள்.

இது தவிர படம் வெளிவந்து கிடைக்கும் கலெக்‌ஷன் தனி. ஆக ரஜினி சொன்னது போல செலவு செய்த தொகையைவிட ஒருமடங்கு லாபம் கிடைக்கும் என்று கணிக்கிறார்கள். அதாவது 150 கோடி ரூபாய்வரை லாபம் கிடைக்கும் என்கிறார்கள். அது நடந்தால் ரஜினிக்கு கலாநிதி எவ்வளவு சம்பளம் கொடுப்பார் என்பதுதான் இப்போதைய எதிர்பார்ப்பு.

Comments

Most Recent