அஜீத்துக்காகவெல்லாம் காத்திருக்க முடியாது! - கவுதம் மேனன் கடுப்பு

http://thatstamil.oneindia.in/img/2010/08/03-gowtham-200.jpg
அஜீத் - கவுதம் மேனன் இடையே இருப்பது நட்பா, கசப்பா என்று கண்டுபிடித்துச் சொல்பவர்களுக்கு தலைக்கு லட்ச ரூபாய் பரிசே தரலாம்.

சில நேரங்களில் அஜீத் அருமையான நடிகர்... அவருடன் இணைந்து படம் பண்ணுவேன் என கவுதம் மேனன் சொல்வதும், அடுத்த சில தினங்களில், அஜீத்துக்கு கதை சொல்வதே கஷ்டமான காரியம் என்றும் பேசுவதுமாக முரண்பட்டு நின்றார்.

அஜீத்தும், இனி கவுதமுடன் சேர மாட்டேன் என்றும், இல்லையில்லை கட்டாயம் படம் பண்ணுவோம் என்றும் முன்னுக்குப் பின் முரணாக பேசி வந்தார்.

இந்த நிலையில் தயாநிதி அழகிரியின் நிறுவனத்துக்காக அஜீத்தை வைத்து கவுதம் மேனன் இயக்குகிறார். வெங்கட் பிரபு படம் முடிந்தததும் இந்தப் படம் தொடங்கும் என்று கூறப்பட்டது.

இதுகுறித்து கவுதம் மேனனிடம் கேட்டபோது வெடித்துவிட்டார் மனிதர்.

"ஏன்... எதற்காக நான் அஜீத்துக்காக காத்திருக்க வேண்டும். இந்நேரம் அவர் படத்தை பாதி முடித்திருப்பேன். ஆனால் அவரோ சொன்ன தேதியில் வராமல் ரேஸுக்குப் போய்விட்டார். இப்போது நான் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீமேக்கில் பிஸியாகிவிட்டேன். எனது நிறுவனம் சார்பில் 3 படங்களைத் தயாரித்து வருகிறேன்.

கமல் அல்லது எனது நண்பன் சூர்யாவுக்காக வேண்டுமானால் காத்திருக்கலாம். அஜீத்துக்காகவெல்லாம் காத்திருக்க முடியாது. என்னுடன் படம் செய்வதாக அறிவித்துவிட்டு, ஊரில் உள்ள எல்லா இயக்குநர்களிடமும் கதை கேட்டு வருகிறார். தோளுக்கு மேல் தலையிருப்பவர்களுடன் மட்டும்தான் என்னால் வொர்க் பண்ண முடியும்," என்றார் கோபாவேசமாக.

என்னதான் நடக்குது?

Comments

Most Recent