அதிகரிக்கும் சல்சா மோகம் ஆட்டம் காணும் ஹீரோ,ஹீரோயின்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

அமெரிக்காவில் புகழ் பெற்ற டான்ஸ், சல்சா. ஆண், பெண் ஜோடியாக காலை தூக்கியபடி ஆடும் இந்த நடனம் இப்போது இந்தியர்களையும் கவர்ந்துவிட்டது. பல டான்ஸ் பள்ளிகளில் இதற்காக தனி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதே போல் பெல்லி டான்ஸ். இந்த சல்சா, பெல்லி மோகம் நம் சினிமாவையும் விட்டுவைக்கவில்லை. ஆரம்பத்தில் சில இந்தி படங்களில் இந்த நடனத்தை புகுத்தினர். இப்போது தமிழில் சிம்பு, வரலட்சுமி நடிக்கும் ‘போடா போடி’ படத்தில் சல்சா டான்ஸ் இடம்பெறுகிறது. இந்த நடனங்களை முறைப்படி கற்றிருந்தால் அது ஆடுவது சுலபம். இல்லையென்றால் கொஞ்சம் ஸ்டெப் மாறினாலும் ‘ஆ.. ஊ…’ என அலற வேண்டியதுதான். அதுதான் நடந்தது, கேத்ரினா கைபுக்கு. ‘தீஸ் மார் கான்’ இந்தி பட ஷூட்டிங்கில் இந்த நடனத்தை டான்ஸ் மாஸ்டர் பர்ஹா கான் சொல்லி தந்தார். ஸ்பாட்டில் முதல்முறையாக அதை கற்று ஆடத் தொடங்கினார் கேத்ரினா. ஆனால் அவரால் அந்த ஸ்டெப்புகளை சரிவர செய்ய முடியவில்லை. இதனால் வயிற்று பகுதியில் அவருக்கு தசை பிடிப்பு ஏற்பட்டது.

‘தில் தோ பச்சா ஹே ஜி’ இந்தி பட ஷூட்டிங் மும்பை ஸ்டுடியோவில் சமீபத்தில் நடந்தது. இதில் ÔகனிமொழிÕ பட நாயகி ஷாஸான் பதம்ஸியுடன் சல்சா ஆட்டம் போட அஜய் தேவகன் தயாரானார். ஒரு ஸ்டெப் கூட ஓகே ஆகவில்லை. 11 டேக்குகளை இருவரும் வீணடித்தனர். 12வது டேக்கில் பொத்தென கீழே விழுந்துவிட்டார் ஷாஸான். சிறு காயம்தான். ஆனாலும் இந்த நடனத்தை படத்திலிருந்தே தூக்கிவிட்டனர். ‘போடா போடி’யில் இடம்பெறும் சல்சாவை வரலட்சுமி முறைப்படி கற்றிருக்கிறார். மற்ற நட்சத்திரங்களின் நிலை அறிந்த சிம்பு, இதை கற்றுக்கொண்ட பின்பே ஆடுவாராம்.

Comments

Most Recent