'சிக்கு புக்கு' படத்தில் டப்பிங் பேச மறுப்பதாக ஆர்யா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மீடியா ஒன் குளோபல்...
மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படம் 'சிக்குபுக்கு'. இதில் ஆர்யா, ஸ்ரேயா நடிக்கிறார்கள். மணிகண்டன் இயக்குகிறார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி இசை சேர்ப்பு பணி நடந்து வருகிறது. இந் நிலையில் தயாரிப்பு நிறுவனம் ஆர்யா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளது. அதில், ஆர்யா 'சிக்குபுக்கு' படத்துக்கு, முறையாக டப்பிங் பேச வர மறுக்கிறார். இருமுறை அவருக்காக ரிக்கார்டிங் தியேட்டர் பதிவு செய்து வைத்திருந்தும் பேச வரவில்லை. இதனால் எங்களுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது' என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆர்யாவிடம் கேட்டபோது, 'தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருப்பது எனக்குத் தெரியாது. நான் நடிக்கும் எல்லா படங்களும் எனக்கு ஒன்றுதான். எல்லா படத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறேன். சிக்குபுக்கு படத்துக்கும் அப்படித்தான் ஒத்துழைப்பு கொடுக்கிறேன்' என்றார்.
Comments
Post a Comment