ஷூட்டிங்கின் போது தண்ணீரில் மூழ்கினார் : ரன்பீர் கபூர்!

http://www.apknews.com/wp-content/uploads/2010/06/Ranbir-Kapoor-Movie-Raajneeti.jpg
சஜித் நதியத்வாலா தயாரித்துள்ள படம் ‘அஞ்ஜானா அஞ்ஜானி’. ரன்பீர் கபூர், பிரியங்கா சோப்ரா ஜோடியாக நடித்துள்ளனர். சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள இந்த படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகிறது. படத்தின் ஷூட்டிங் வெளிநாட்டில் நடந்த போது ரன்பீர் தண்ணீரில் முழ்கிய சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி சித்தார்த் ஆனந்த் கூறும்போது, ‘சம்பவம் நடந்தது உண்மைதான். ரன்பீருக்கு தண்ணீர் என்றாலே பயம். நீச்சல் குளத்தில் குதிப்பது போல் காட்சி. ஓரமாக குதிக்கிறேன் என்றார் ரன்பீர். ஆனால், தடுமாறி ஆழத்தில் விழுந்துவிட்டார். விழுந்ததும் கையை தூக்கி தூக்கி காண்பித்தார். கிண்டலாக அப்படி செய்கிறார் என்று நினைத்தோம். ஆனால் நிஜமாகவே மூழ்கிவிட்டார் ரன்பீர். பிறகு அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்றினார்கள்’ என்றார்.

Comments

Most Recent