'தொட்டுப்பார்' பெரிய ஹீரோக்கள் நடிக்க விரும்பிய படம் என்று இயக்குனர் நந்...
'தொட்டுப்பார்' பெரிய ஹீரோக்கள் நடிக்க விரும்பிய படம் என்று இயக்குனர் நந்து கூறினார். தோல்பாவை தியேட்டர்ஸ் சார்பில் ஜானகி சிவகுமார் தயாரிக்கும் படம் 'தொட்டுப்பார்'. அடுத்த மாதம் 10&ம் தேதி வெளிவருகிறது. படம் பற்றி இயக்குனர் கே.வி.நந்து கூறியதாவது: 'தொட்டுப்பார்' ஆக்ஷன் கதைதான். கிராமத்திலிருந்து சந்தர்ப்ப சூழ்நிலையால் சென்னைக்கு வரும் ஹீரோ சந்திக்கும் நபர்களும், பிரச்னைகளும்தான் கதை. அவன் கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்ததற்கான காரணமும் சென்னையில் சந்திக்கும் நபர்களும் இணையும்போது கிளைமாக்ஸ். இதன் திரைக்கதை பரபரவென்று இருக்கும். பெரிய ஹீரோக்கள் நடிக்க விரும்பிய கதை. கதைகேட்டு அவர்களும் நடிக்க சம்மதித்தார்கள். ஆனால் அவர்கள் காலதாமதம் செய்யவே புதுமுகங்களை வைத்து படத்தை முடித்து விட்டோம். நல்ல ஆக்ஷன் கதைக்கு ஹீரோ முக்கியமில்லை என்று கருதியதால் துணிச்சலுடன் புதுமுகத்தை வைத்து உருவாக்கினோம். படத்தை பார்த்த கலைப்புலி எஸ்.தாணு தானே வாங்கி வெளியிடுகிறார். நாயகன் விதார்த், நாயகி லக்ஷணா, நான், தயாரிப்பாளர் அனைவருமே புதுமுகம்தான். புதுமுகங்களாலும் பக்கா கமர்சியல் படம் தர முடியும் என்பதை இந்தப் படம் நிரூபிக்கும். ரமணா வித்தியாசமான வில்லனாக நடித்திருக்கிறார்.
Comments
Post a Comment