நல்லகாலம் பொறக்குது.. நல்லகாலம் பொறக்குது... கடை தெரு படத்துல வில்லன் வேஷம் போட்டவரு பெருமாள் பேர் கொண்ட டைரக்டர். அவருக்கு ஆகாயம் படத்துல...
நல்லகாலம் பொறக்குது.. நல்லகாலம் பொறக்குது...
கடை தெரு படத்துல வில்லன் வேஷம் போட்டவரு பெருமாள் பேர் கொண்ட டைரக்டர். அவருக்கு ஆகாயம் படத்துல போலீஸ் வேஷம் தந்தாங்களாம்... தந்தாங்களாம்... இன்னொரு படத்துல போலீஸ் வேஷம் போடுறேன். இந்த படத்துல நடிக்க முடியாதுன்னு சொல்லி திடீர்னு விலகிட்டாராம்... டைரக்டரு விலகிட்டாராம்...
அனுவான நடிகைக்கு வர்ற வாய்ப்பு எல்லாத்துலேயும் கிஸ் சீனும் சேர்ந்து வருதாம்... சேர்ந்து வருதாம்... Ôமதுரை இன்ஸிடென்ட் படத்துல கிஸ் சீன்ல நடிச்சது தப்பா போச்சு. வர்ற இயக்குனருங்க, கிஸ் சீனோடு கதை சொல்ல வர்றாங்கÕன்னு நடிகை புலம்புறாரு... புலம்புறாரு...
முத்தக் காட்சியை நீக்கினாத்தான் நடிப்பேன்னு நடிகையும் பிடிவாதமா இருக்கிறாராம்... இருக்கிறாராம்...
விவாகரத்து வாங்கின மீர நடிகை திரும்ப மலையாள சினிமாவுக்கு போறாராம்... போறாராம்... உங்க படத்துல வாய்ப்பு கொடுங்கன்னு தெரிஞ்ச மலையாள ஹீரோக்களுக்கு தூது அனுப்பியிருக்கிறாராம்... அனுப்பியிருக்கிறாராம்... சில ஹீரோக்கள், தங்களோட படத்துக்கு நடிகை பெயரை சிபாரிசும் பண்ணியிருக்காங்களாம்... பண்ணியிருக்காங்களாம்...
Comments
Post a Comment