ஷூட்டிங் இல்லாதபோது, விடுமுறை ட்ரிப்பாக முன்னணி ஹீரோக்கள் வெளிநாடுகளுக்கு பறந்து விடுகின்றனர். விஜய், அஜீத் போன்றவர்கள் கோடை காலம் அல்லது...
ஷூட்டிங் இல்லாதபோது, விடுமுறை ட்ரிப்பாக முன்னணி ஹீரோக்கள் வெளிநாடுகளுக்கு பறந்து விடுகின்றனர். விஜய், அஜீத் போன்றவர்கள் கோடை காலம் அல்லது படத்தை முடித்த கையோடு ஒரு சில வாரங்களுக்கு குடும்பத்துடன் வெளிநாடு செல்வது வழக்கம். இந்த விடுமுறை கொண்டாட்ட பாணியை இப்போது சிம்பு, பரத், அருண் விஜய் போன்ற இளம் ஹீரோக்களும் பின்பற்ற தொடங்கியுள்ளனர். பாலிவுட்டை போல், திரையுலகினர் வைக்கும் பார்ட்டிகளும் இங்கு அடிக்கடி நடக்கிறது. அந்த பார்ட்டியில் டீம் அமைத்துக்கொண்டு இளம் நடிகர், நடிகைகள் கலந்துகொள்கின்றனர். நயன்தாரா, அனுஷ்கா, ஜெனிலியா போன்றவர்கள் தங்கள் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாட விரும்புகிறவர்கள். ஷூட்டிங் இல்லையென்றால் பிறந்த நாளில் தங்கள் பெற்றோருக்கு ஓட்டலில் விருந்து கொடுப்பது, பிக்னிக் செல்வது இவர்கள¤ன் வழக்கமாம்.
Comments
Post a Comment