ஜெயலலிதாவுக்கும் நேரில் அழைப்பு வைத்த ரஜினி!

http://thatstamil.oneindia.in/img/2010/08/24-rajini-jaya200.jpg
தனது இளைய மகள் சௌந்தர்யா - அஸ்வின் குமார் திருமணத்துக்கு வருமாறு, முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார் நடிகர் ரஜினிகாந்த்.

இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "செளந்தர்யா ரஜினியின் திருமணம் செப்டம்பர் 3-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பிதழை ரஜினியும், அவரது மனைவி லதாவும் போயஸ் கார்டன் சென்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் நேரில் வழங்கினர்," என்று கூறப்பட்டுள்ளது.

சௌந்தர்யாவின் நிச்சயதார்த்ததுக்கும் லதா ரஜினி, மூத்தமகள் ஐஸ்வர்யா சகிதமாக நேரில் சென்று ஜெயலலிதாவுக்கு அழைப்பிதழ் தந்தார் ரஜினி. ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ரஜினி நேரில் போய் அழைக்காத நிலையிலும் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் குடும்பத்துடன் வந்திருந்து வாழ்த்தினார்.

Comments

Most Recent