மீண்டும் மலர்ந்த நட்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

‘ஆய்த எழுத்து’ படத்தில் சித்தார்த் ஜோடியாக நடித்தார் த்ரிஷா. பின் தெலுங்கில் இதே ஜோடி பிரபு தேவா இயக்கத்தில் நடித்தது. படம் ஹிட்டானது. ‘ஆய்த எழுத்துÕ ஷூட்டிங்கிலேயே த்ரிஷாவும் சித்தார்த்தும் நட்பாக பழகினர். த்ரிஷா, தமிழிலும் சித்தார்த், தெலுங்கிலும் நடித்து வந்தபோதும் மொபைலில் நட்பை வளர்த்தனர். காலப் போக்கில் இவர்கள் இடையிலான பேச்சுவார்த்தை நின்றுபோனது. ஏதேச¢சையாக ஏதேனும் விழாவில் சந்தித்தால் பேசிக்கொள்வார்கள். அப்படிப்பட்டவர்களை மீண்டும் இணைத்திருக்கிறது டுவிட்டர்.

டுவிட்டரில் தொடர்ந்து எழுதி வருகிறார் சித்தார்த். சமீபத்தில் த்ரிஷாவை சந்தித்திருக்கிறார். அப்போது, ‘நீயும் டுவிட்டரில் எழுதேன்’ என ஐடியா கொடுத்திருக்கிறார் சித்தார்த். உடனே த்ரிஷா டுவிட்டர் கணக்கை தொடங்கிவிட்டார். இப்போது இருவரும் அதிலேயே பேசிக்கொள்கிறார்கள். ‘மீண்டும் ஒரு படத்தில் நாம் சேர்ந்து நடிக்கலாமா’ என கேட்டு, தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார் சித்தார்த். ‘நேரம் வரும்போது பார்க்கலாம்Õ என சொல்லியிருக்கிறாராம் த்ரிஷா.

Comments

Most Recent