தமிழில் ரெசிடென்ட் ஈவில் ஆஃப்டர் லைஃப்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஆக்ஷன், த்ரில்லருடன் 3 டி தொழில்நுட்பத்துடன் உருவாகியுள்ள ஹாலிவுட் படம் 'ரெசிடென்ட் ஈவில்: ஆஃப்டர் லைஃப்'. பால் டபிள்யூ எஸ்.ஆண்டர்சன் கதை எழுதி இயக்கியுள்ளார். மனித இனத்தை கொடிய வைரஸ் தாக்குகிறது. பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பலி வாங்கிய வைரஸின் தாக்குதலில் இருந்து மற்றவர்களைக் காப்பாற்றத் துடிக்கும் ஆலிஸ், அவர்களை வேறொரு நகரத்துக்கு அழைத்துச் செல்கிறாள். அங்கேயும் உயிர்க்கொல்லி வைரஸ் பரவி, அப்பாவி மக்களை கொடூரமாகத் தாக்குகிறது. மேலும், அனைவரையும் கொல்ல ஒரு புதிய சக்தி புறப்பட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த ஆலிஸ், திடீரென்று கிடைத்த ஒரு சக்தியால் அனைவரையும் காப்பாற்ற முயன்றாள். அது நிறைவேறியதா என்பதே கதை. இது அடுத்த மாதம் 10&ம் தேதி தமிழிலும், ஆங்கிலத்திலும் ரிலீஸாகிறது. சோனி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. ஆலிஸ் வேடத்தில் மில்லா ஜாவோவிச் நடிக்கிறார்.

Comments

Most Recent