மாஸ்கோவின் காவிரி - விமர்சனம்

http://t0.gstatic.com/images?q=tbn:25MEOZZ6VQEd0M:https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikhm7tWp5X_enlLTZY4nWiC7s_C4QeGz1pKqKLrAPv3w_WR0_4zybyi-BPFYw_rJeljR_BMk8bfci5a4Pbrfvp0o5kLX1gTAvnmlXVqq2TGvuPnlUr8g6aD4a7gBdzX9J4C_foeelhqAA/s320/moscowin_kaveri_poster_01.jpg&t=1 


னது திறமையான ஒளிப்பதிவின் மூலம் தமிழ் சினிமாவை பிரமிக்க வைத்தவர் ரவிவர்மன். அவர் இயக்கியிருக்கும் முதல் படம் மாஸ்கோவின் காவிரி. 

இப்போது இருக்கிற இளசுகளை கவரும் வகையில் ரொம்பவும் ஸ்டைலிஷான ஒரு கதை. ரஷ்யாவின் மாஸ்கோ நதியையும் தென்னிந்தியாவின் காவிரியையும் இணைக்கும் கவித்துவமான டைட்டில் மாஸ்கோவின் காவிரி.


சாஃப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்கள் தன் எந்திர வாழ்கையில் அனுபவிக்கும் அவஸ்தைகளையும் அவர்களின் வாழ்க்கை முறையையும் வித்யாசமான முறையில் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர். ஆனால் அது முயற்சியோடு நின்றுவிட்டது என்பதே பரிதாபம். 

நாயகன் பெயர் மாஸ்கோ, நாயகி பெயர் காவிரி. மாஸ்கோவும் காவிரியும் எப்படி இணைகிறார்கள் என்பதில் ஒன்றும் பெரிய சுவாரஸ்யம் இல்லை. முதல் பார்வையிலேயே மாஸ்கோவிற்கு காவிரிமேல் காதல் வந்துவிடுகிறது. 

தமிழ் சினிமாவின் வழக்கமான காதலர்களை போல் காவிரி பின் அலைகிறார் மாஸ்கோ. மாஸ்கோவை பிடிக்காத மாதிரி முதலில் கொஞ்சம் சீன் போட்டாலும் சில காட்சிகளுக்கு பிறகு காதலுக்கு பச்சை கொடி காட்டுகிறார் காவிரி. மாஸ்கோவும் காவிரியும் ‘நீ பாதி நான் பாதி...’ என்று ஒருவருக்கொருவர் ஒன்றிவிட, கல்யாணம் செய்து கொள்ளாமலேயே ஒரே வீட்டில் கிட்டதட்ட கணவன் மனைவியை போல் வசிக்கிறார்கள். பார்வையில் இருந்த காதல் இனித்தபோது, சேர்ந்து வாழும் நேரம் காதல் கசப்பாகிறது.
 
மாஸ்கோவிற்கும் காவிரிக்கும் சின்ன சின்ன விஷயங்கள் துவங்கி எல்லா விஷயங்களிலும் ஈகோ பிரச்சனை. இந்தக் கதை ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க... சம்பந்தமே இல்லாமல் வில்லன் (ஹர்ஷவர்தன் - Y.G.மகேந்திரன் மகன்)ஒருவன் இவர்கள் வாழ்க்கையில் நுழைகிறார்.

 
இதுவரைக்கும் உருப்படியா ஒன்றும் இல்லாத கதையில் இனிமேலும் புதுசா ஏதாவது இருக்க போகுதா என்ன? வில்லன் மூலம் சில பாடங்களை கற்றுக் கொள்ளும் மாஸ்கோவும் காவிரியும் க்ளைமாக்ஸில் இணைகிறார்கள்.

படத்தில் வன்முறையான காட்சிகள் எதுவும் இல்லை. ஆனா இப்படி படம் எடுத்து ரசிகர்களை கொல்லும் அளவிற்கு வேற ஏதாவது வன்முறை இருக்க முடியுமா என்ன?

ஒளி ஓவியர் ரவிவர்மன் கேமரா வித்தைகளை மட்டும் சிறப்பாக கையாண்டிருக்கிறார். மற்றபடி இயக்கத்தில் எதுவும் சொல்லும்படியா இல்லை. கதைசொன்ன விதம், கதாபாத்திரங்கள், காட்சிக் கோர்வைகள் எல்லாமே மைனஸ். 

நாயகன் புதுமுகம் ராகுல் ரவீந்திரன், சொல்லும் அளவிற்கு பெருசா எதுவும் இல்லை. நாயகி சமந்தா, பாணா காத்தாடியில் இறக்கைகட்டி பறந்தவர். நல்ல வேளை சமந்தாவிற்கு இது முதல் படமாக வெளிவரவில்லை.  

இசை எஸ்.தமன். நல்ல பாடல்களை கொடுத்தாலும் அதை சரியான விதத்தில் பயன்படுத்தாமல் வீணடித்திருக்கிறார் இயக்குனர்.     

எதிர்பார்ப்போடு பார்க்க வரும் ரசிகர்களுக்கு எதாவது ஒரு நல்ல விஷயம் படத்தில் வைத்திருக்கலாம். 

குறும் படமா சொல்ல வேண்டிய விஷயத்தை இப்படி திரைப்படமா கொடுத்ததால் தலைவலி மட்டுமே மிச்சம்.    

மாஸ்கோவின் காவிரி - நத்திங் ஸ்பெஷல்!

Comments

Most Recent