பிரகாஷ் ராஜ் போனி வர்மாவால் ஹேமமாலினி அப்செட்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பிரகாஷ் ராஜ், போனி வர்மா திருமணம் ஆகஸ்ட் 24ம் தேதி மும்பையில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளில் இறங்கிவிட்டார் பிரகாஷ் ராஜ். தென்னிந்திய மற்றும் இந்தி சினிமாவை சேர்ந்த தனது நண்பர்களை திருமணத்துக்கு அழைக்க முடிவு செய்திருக்கிறார். பிரகாஷ் ராஜ்
திருமண வேலைகளில் பிசியாக இருந்தாலும் போனி வர்மா, படங்களுக்கு நடனம் அமைக்கும் வேலையில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தியில் ஹேம மாலினி தயாரிக்கும் படம் Ôடெல் மீ ஓ குதாÕ. இதில் அவரது மகள் இஷா தியோல் நடிக்கிறார். இப்படத்தின் வசன காட்சிகளுக்கான ஷூட்டிங் முடிந்துவிட்டது. தற்போது படத்தில் இடம்பெறும் 5 பாடல்களை படமாக்கும் வேலைகள் நடக்கிறது. இந்த 5 பாடல்களுக்கும் போனி வர்மாதான் டான்ஸ் மாஸ்டர். இம்மாதம் 15ம் தேதி தொடங்கும் பாடல்களுக்கான ஷூட்டிங் அடுத்த மாதம் வரையும் நடக்க உள்ளதாம். இதற்கிடையே 24ம் தேதி தனது திருமணம் இருப்பதால் அன்று ஷூட்டிங்கில் பங்கேற்க முடியாது என போனி வர்மா கூறியிருக்கிறார். அதற்கு ஹேமமாலினி ஓகே சொல்லிவிட்டார். ஆனால் இப்போது பிரகாஷ்ராஜ் & போனி வர்மாவின் திடீர் ஹனிமூன் பிளானால் அப்செட் ஆகியிருக்கிறாராம் ஹேமமாலினி.
Ôஒரு பாடல் காட்சியை வெளிநாட்டில் படமாக்க வேண்டும். அதற்காக போனி வர்மாவுடன் படக்குழுவினர் இம்மாத இறுதியில் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தோம். முதலில் 24ம் தேதி மட்டும் ஷூட்டிங்கிற்கு வரமுடியாது என போனி சொன்னார். இப்போது திடீரென திருமணத்துக்கு பின் 10 நாள் பிரேக் வேண்டும். ஹனிமூனுக்காக குலுமணாலி செல்கிறேன் என கூறுகிறார். ஷூட்டிங் தடைபடும் என்பதால் ஹேமமாலினி
அப்செட்டில் இருக்கிறார்Õ என பட யூனிட்டை சேர்ந்த ஒருவர் கூறினார். இது பற்றி போனி வர்மா கூறும்போது, திருமணத்துக்கு பின் நானும் பிரகாஷும் குலுமணாலிக்கு செல்வது உண்மைதான். இதை ஹேமமாலினியிடம் சொல்லிவிட்டேன். இதனால் படத்துக்கு எதுவும் பிரச்னை இருப்பதாக எனக்கு தெரியவில்லைÕ என்றார்.

Comments

Most Recent