படத்துக்காக இரும்பு ஆலையில் வேலை பார்த்த ஹீரோ

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news


சமுத்திரக்கனி உதவியாளர் சூர்ய பிரபாகர் இயக்கும் படம் 'தா'. ஸ்ரீஹரி, நிஷா ஜோடியாக அறிமுகமாகின்றனர். படம் பற்றி சூர்ய பிரபாகர் கூறியதாவது:முரட்டுத்தனமான ஹீரோ, ஒரு காதலை பிரிக்கிறான். அப்போது சந்திக்கும் பெண், நான்கு பேரை அடிப்பது மட்டும் ஆண்மையில்லை. ஒரு பெண்ணுக்கு பிடிக்கிற மாதிரி இருப்பதுதான் ஆண்மை' என்கிறார். இதையடுத்து காதலிக்க நினைக்கும் ஹீரோவுக்கு வீட்டில் பெண் பார்க்கிறார்கள். அந்த பெண் நகரத்தை சேர்ந்தவர். அவள் தன்னை விட்டு போய்விடக்கூடாது என்று நினைக்கிறான் ஹீரோ. ஏன், எதற்கு என்பது கதை. இரும்பு உருக்கு ஆலையில் ஹீரோ வேலை பார்ப்பது படத்தின் கேரக்டர். அந்த அனுபவத்துக்காக, ஹீரோ ஸ்ரீஹரியை இரண்டு மாதம் கோவையிலுள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்க வைத்தோம். தமிழக& கேரள எல்லையில் பசுமை எழில் சூழ்ந்த இடங்களை மட்டுமே படங்களில் பார்த்திருக்கிறோம். இதில் வறட்சியான ஊரை காண்பிக்கிறோம். படம் முடிந்து டப்பிங் பணி நடந்து வருகிறது. இவ்வாறு சூர்ய பிரபாகர் கூறினார்.

Comments

Most Recent