ஸ்ரேயாவை சைட் அடிக்கவே வந்திருக்காங்க ரசிகர்கள் பற்றி ஆர்யா கமென்ட் :விழாவில் சலசலப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஆர்யா, ஸ்ரேயா நடித்துள்ள ‘சிக்கு புக்கு’ பட ஆடியோ விழா சென்னையில் ரசிகர்கள் முன்னிலையில் நடந்தது. இதில் பேசிய ஆர்யா, 'இதுவரை பார்த்த ஆர்யாவை விட இந்த படத்தில் சலவைக்கு போய் வந்தது போன்ற புது ஆர்யாவை பார்க்கப்போகிறீர்கள். அந்தளவுக்கு என்னை பளிச்சென காட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் குருதேவ். வழக்கமாக நான்கு சுவற்றுக்குள்தான் ஆடியோ ரிலீஸ் நடக்கும். அப்படி இல்லாமல், ரசிகர்கள் முன்னிலையில் இங்கு ஆடியோ வெளியாகிறது. இங்கு 4 அடுக்கு மாடிகளிலும் ரசிகர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். இது, அவர்கள் பெண்களை சைட் அடிக்கும் நேரம். அதை கட் பண்ணிவிட்டு இங்கு வந்திருப்பது, ஸ்ரேயாவை சைட் அடிக்கத்தான்Õ என ஆர்யா சொன்னதும் ரசிகர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. உடனே, ‘நானும் கொஞ்சம் அவரை சைட் அடித்துக்கொள்கிறேன்’ என சமாளித்தார் ஆர்யா. சைட் என்ற வார்த்தையை மட்டும் புரிந்து கொண்ட ஸ்ரேயா, சிரித்தபடி அமர்ந்திருந்தார்.

Comments

Most Recent