புலிவேஷம் தாதா கதையா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஆர்.கே வேர்ல்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் 'புலிவேஷம்'. பி.வாசு இயக்கும் இந்த படத்தில் ஆர்.கே ஹீரோவாக நடிக்கிறார். மற்றும் கார்த்திக், சதா, திவ்யா விஸ்வநாத், கஞ்சா கருப்பு உட்பட பலர் நடிக்கின்றனர். படம் பற்றி ஆர்.கே. கூறியதாவது: ஒரு குழந்தையை புலி பிடித்துக்கொண்டது என்றால் புலியிடம் இருந்து குழந்தையை மீட்கும் தந்தை வீரனா, தாதாவா, கடமை உணர்வுள்ளவனா என்பதற்கு என்ன விளக்கமோ, அதுதான் 'புலி வேஷம்' படத்தின் கதை. தாதாவுக்கும் கடமை உணர்வுள்ளவனுக்கும் உள்ள வித்தியாசத்தை சொல்லும் படம். யாரும் தாதாவாக பிறப்பதில்லை. சூழ்நிலை உருவாக்குகிறது.

ஆனால், எல்லா மனிதர்களுக்குள் ஒரு தாதா இருக்கிறான். அவன் எப்போது, எதற்கு வெளிவருகிறான் என்ற விஷயம்தான் வேறுபடுகிறது. இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் கார்த்திக். அவரது கேரக்டர் பேசப்படும் விதமாக இருக்கும். படம் முடிந்துவிட்டது. விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தை அடுத்து, ஷாஜி கைலாஷ் இயக்கும் படத்தில் நடிக்கிறேன். இந்தியில் ராம் கோபால் வர்மா இயக்கத்தில், நானா படேகர் நடித்து ஹிட்டான 'அப்தக்சப்பன்' படத்தின் ரீமேக் இது. காக்கிசட்டை போடாத, கடமை உணர்வு வேண்டும் என்று சொல்லாத போலீஸ் அதிகாரி வேடம். மிகவும் யதார்த்தமான படம். இவ்வாறு ஆர்.கே. கூறினார்.

Comments

Most Recent