ஜீவா நடிக்கும் ரவுத்திரம் படத்தின் இரண்டாம் ஷெட்யூல் ஒரு வழியாக தொடங்கியுள்ளது. ஸ்ரேயாவால் இரண்டாவது ஷெட்யூல் தாமதமாகி வந்தது. சிக்கு புக...
ஜீவா நடிக்கும் ரவுத்திரம் படத்தின் இரண்டாம் ஷெட்யூல் ஒரு வழியாக தொடங்கியுள்ளது. ஸ்ரேயாவால் இரண்டாவது ஷெட்யூல் தாமதமாகி வந்தது. சிக்கு புக்கு, தெலுங்கு டான் சீனு படங்களின் ஷூட்டிங்கிற்காக வெளிநாடுகளுக்கு பறந்துவிட்டதால் ரவுத்திரம் படப்பிடிப்பில் ஸ்ரேயா பங்கேற்கவில்லை. அவர் இல்லாமலேயே முதல் ஷெட்யூலை முடித்தனர். இரண்டாம் ஷெட்யூலுக்காக அவரிடம் பட யூனிட் தேதி கேட்டபோது, குக்கிங் வித் ஸ்டெல்லா ஆங்கில படத்தின் புரமோஷனுக்காக வெளிநாடு சென்றுவிட்டாராம் ஸ்ரேயா. இதனால் ஸ்ரேயாவுக்காக யூனிட் காத்திருந்தது. இப்போது ஒரு வழியாக அவர் ரவுத்திரம் படத்துக்கு கால்ஷீட் ஒதுக்கியிருக்கிறார். இதையடுத்து ஜீவாவுடன் அவர் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.
Comments
Post a Comment