தெலுங்குப் படப்பிடிப்பின்போது திடீரென கீழே விழுந்தார் பிரபல நடிகர் ஜூனியர் என்டிஆர். இதில் அவர் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. தெலுங்கில...
தெலுங்குப் படப்பிடிப்பின்போது திடீரென கீழே விழுந்தார் பிரபல நடிகர் ஜூனியர் என்டிஆர். இதில் அவர் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
தெலுங்கில் முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் முன்னாள் ஆந்திர முதல்வரும் நடிகருமான என்.டி. ராமராவின் பேரன். ஜூனியர் என்.டி.ஆருக்கு சமீபத்தில்தான் திருமணம் நிச்சயமானது. மணமகள் பெயர் லட்சுமி பிரணதி ஆந்திர கோடீஸ்வரர் சீனிவாசராவின் மகள். மணமகளுக்கு இன்னும் 18 வயதாகாததால் திருமணம் தள்ளிப் போடப்பட்டுள்ளது.
ஜூனியர் என்.டி.ஆர். தற்போது ‘பிருந்தாவனம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள கோகா பேட்டையில் நடந்து வருகிறது. இன்று காலை ஒரு சண்டை காட்சியை படமாக்கினர்.
ஜூனியர் என்.டி.ஆர். வில்லன்களுடன் ஆவேசமாக மோதுவது போல் இக்காட்சி படமாக்கப்பட்டது. அந்தரத்தில் பறந்து அவர் சண்டை போடுவது போல காட்சி எடுக்கப்பட்ட போது திடீரென அவர் கீழே விழுந்தார். இதில் அவர் மண்டையில் பலத்த அடி பட்டு ரத்தம் கொட்டியது. ஜூனியர் என்.டி.ஆர். மயக்கமடைந்தார்.
உடனடியாக அவரை கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் ‘பிருந்தாவனம்’ படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. ஏற்கெனவே தெலுங்கு தேசத்துக்காக ஜூனியர் என்டிஆர் பிரச்சாரம் செய்த போது பெரும் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment