நந்தி படத்துக்கு இரவில் ஷூட்டிங் நடத்த எதிர்ப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தமிழ்வாணன் இயக்கும் படம் 'நந்தி. அகில் ஹீரோ, ரேணிகுண்டா சனுஷா ஹீரோயின். பல்லாவரம் அருகே, கவுல்பஜாரில் கோயில் திருவிழா காட்சியை படமாக்க படக்குழு அங்கு சென்றது. திருவிழா காட்சிக்கான செட்டும் அமைக்கப்பட்டது. இரவு நெருங்கியதும் பெரிய ஸ்பீக்கர்கள் வைத்து பாடலை ஓடவிட்டார்கள். வரிசையாக சரவெடி, வானவெடி, ராக்கெட் வெடி என அமர்க்களப்படுத்தினார்கள். அப்போது ஊர் மக்கள் சிலர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தனர். 'எல்லோரும் தூங்கும் நேரத்தில் நீங்கள் இப்படி சத்தமாக ஷூட்டிங் நடத்தக்கூடாது. உடனே வேறு இடத்துக்கு போங்கள் என்றனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸுக்கு தகவல் தெரிந்து அங்கு வந்தனர். இதையடுத்து இரு தரப்பினரிடமும் சமரச பேச்சு நடந்தது.
அதிர் வேட்டு, ராக்கெட் வெடி வெடிக்கக்கூடாது. புஷ்வானம் மட்டுமே பயன்படுத்தலாம். ஸ்பீக்கரில் அதிரும் சத்தத்துடன் பாடல் போடக்கூடாது என்று மக்கள் கண்டிஷன் போட பட குழுவினர் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து படப்பிடிப்பு நடந்தது.

Comments

Most Recent