மலையாளத்தில் மோகன்லால் நடித்த 'பகவான்’, கன்னடத்தில் சிவராஜ் குமார் நடித்த 'சுக்ரீவன்’ படங்களை இயக்கியவர் பிரசாந்த். இவர் தமிழில்...
மலையாளத்தில் மோகன்லால் நடித்த 'பகவான்’, கன்னடத்தில் சிவராஜ் குமார் நடித்த 'சுக்ரீவன்’ படங்களை இயக்கியவர் பிரசாந்த். இவர் தமிழில் 'உங்க வீட்டு பிள்ளை’ என்ற படத்தை புதுமுகங்களை வைத்து இயக்குகிறார். இது பற்றி அவர் கூறியது: மலையாளத்திலும் கன்னடத்திலும் சூப்பர் ஸ்டார் நடிகர்களை இயக்கினேன். அடுத்து 'உங்க வீட்டு பிள்ளை’ என்ற படத்தை தமிழ், மலையாளத்தில் இயக்க முடிவு செய்தேன். நகைச்சுவை கதையான இதில் மலையாள நடிகர் திலீப் நடித்தால் நன்றாக இருக்கும். ஆனால் கதைப்படி ஹீரோவுக்கு டீன் ஏஜ். கல்லூரி மாணவனை போல் இருக்க வேண்டும். அதனால் திலீப்பை தேர்வு செய்யவில்லை. புதுமுகம் விஷ்ணு சரண் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஹீரோயின்களாக ஆஷிகா, சுரபி நடிக்கின்றனர்.
Comments
Post a Comment