இந்தி சினிமா கைவிட்டதால் தெலுங்கு படத்தில் நடிக்க வந்திருக்கிறார் அமீஷா படேல்.ஆரம்பத்தில் தமிழில் கீதை, தெலுங்க¤ல் சில படங்களில் நடித்தால...
இந்தி சினிமா கைவிட்டதால் தெலுங்கு படத்தில் நடிக்க வந்திருக்கிறார் அமீஷா படேல்.ஆரம்பத்தில் தமிழில் கீதை, தெலுங்க¤ல் சில படங்களில் நடித்தாலும் இந்தியில் வாய்ப்புகள் கிடைத்ததும் தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பதை தவிர்த்தார் அமீஷா.தென்னிந்திய சினிமா இயக்குனர்கள் அவரை சந்திப்பதே முடியாத காரியமாகிவிட்டது. சில தென்னிந்திய படங்களில் நடிக்க கதை கேட்டாலும் அதிக சம்பளம் கேட்டு வந்தார் அமீஷா. இப்போது இந்தியில் அவருக்கு மவுசு குறைந்துவிட்டது. இதனால் படங்களும் இல்லை. இதையடுத்து தெலுங்கில் வந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ளார். பாலகிருஷ்ணா ஹீரோவாக நடிக்கும் படம் பரம் வீர சக்ரா. இதில் அனுஷ்கா ஹீரோயினாக நடிப்பதாக இருந்தது. திடீரென அவர் படத்திலிருந்து விலகிக்கொண்டார். இதையடுத்துதான் இந்த வாய்ப்பு அமீஷாவுக்கு சென்றிருக்கிறது. இதில் இன்னொரு ஹ¦ரோயினாக ஷீலா நடிக்கிறார். இரு ஹீரோயின் கதை என்றாலும் வாய்ப்பே இல்லாததற்கு இதில் நடிக்கலாம் என அமீஷா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
Comments
Post a Comment