ஜாக்கிஜான் மோகன்லால் இணைந்து நடிக்கும் நாயர்ஷான்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஆசிய சூப்பர் ஸ்டார் ஜாக்கிஜானும், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் இணைந்து நடிக்கும் படம்தான் நாயர்ஷான். இப்படத்தை ஆல்பர்ட் இயக்குகிறார். கூடுதல் பலமாக ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். 150 கோடி பக்ஜெட்டில் எடுக்கப்படும் இப்படம் ஒரு இந்திய&ஜப்பான் வரலாற்றுப் படமாக அமையும் என படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.இப்படத்தில் மோகன்லால், இளைஞர்களின் தலைவனாகவும், துடிப்பான தேசப்பற்று மிக்க இந்தியக் குடிமகனுமான கேரக்டரில் நடிக்கிறார். படத்தில் மோகன்லால் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயர் அய்யப்பன் பிள்ளை நாயர்.
பள்ளி படிப்புகளை எல்லாம் தனது சொந்த ஊரான கேரளாவிலே முடிக்கிறார், பள்ளிப் பருவத்தின் போதே இந்தியாவின் மீதான பிரிட்டிஷ் அரசின் காலணியாக்கத்தை எதிர்த்து போராடுகிறார். ஒரு கட்டத்தில் பிரிட்டீஷ் அரசாங்கத்திற்கு எதிராக ஜப்பானுக்கு போக வேண்டிய நிலை ஏற்படுகிறது. அங்கு ஜப்பானிய மக்களுக்கு ஆதரவாக போராட்டம்(பிரிட்டிஷ் எதிராக) நடத்துகிறார். ஜாக்கி ஜான் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.ஜாக்கிஜான், ஏ.ஆர்.ரகுமான் போன்ற பிரபலங்களின் கூட்டணியால் ரசிகர்களிடையே இப்படம் மாபெறும் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Most Recent