சினிமா மற்றும் டிவி கலைஞர்களுக்கு சென்னை அருகே பையனூரில் 96 ஏக்கர் பரப்பளவில், 15 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி நேற...
சினிமா மற்றும் டிவி கலைஞர்களுக்கு சென்னை அருகே பையனூரில் 96 ஏக்கர் பரப்பளவில், 15 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி நேற்று தொடங்கிவைத்தார். சினிமா மற்றும் டிவி கலைஞர்கள் தங்களுக்கு வீடு கட்டுவதற்காக இடம் ஒதுக்கித் தரவேண்டும் என்று முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று சென்னையை அடுத்த பையனூரில் 96 ஏக்கர் இடத்தை அவர்களுக்கு ஒதுக்கித்தர முதல்வர் உத்தரவிட்டார். அங்கு கலைஞர்களுக்கு தனித்தனி வீடுகளும், 4 நவீன ஸ்டுடியோக்களும் கட்டப்பட உள்ளன. முதல்கட்டமாக 5 ஆயிரம் வீடுகள் கட்டப்படுகின்றன. இந்த புதிய சினிமா நகரத்துக்கு 'கலைஞர் நகரம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பையனூரில் இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெறுவதாக இருந¢தது. தொடர் மழை காரணமாக, கலைஞர் நகரம் திட்ட தொடக்க விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்துக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து பல்கலைக்கழக வளாகம் விழாக்கோலம் பூண்டிருந்தது. அங்கு பொய்க்கால் குதிரை ஆட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் ஆகியவற்றுடன் தாரை தப்பட்டை முழங்க முதல்வர் கருணாநிதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
திரைப்பட கலைஞர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தை கருணாநிதி தொடங்கி வைத்து, சிறப்புரையாற்றினார். முன்னதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன் வரவேற்புரையாற்ற¤னார். மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், அமைச்சர் பரிதி இளம்வழுதி, நடிகர்கள் ரஜினிகாந்த், ஜிதேந்திரா, மம்மூட்டி, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், இயக்குனர்கள் பாலசந்தர், பாரதிராஜா உள்ளிட்டோர் பேசினர். பெப்சி அமைப்பின் தலைவர் வி.சி.குகநாதன் நன்றி கூறினார்.
விழாவில் துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்றனர். மேலும் நடிகர்கள் கார்த¢திக், வ¤ஜயகுமார், இயக்குனர்கள் பாக்யராஜ், பி.வாசு தயாரிப்பாளர்கள் தாசரி நாராயண ராவ், ஏவிஎம் சரவணன், நடிகைகள் ராதிகா, குஷ்பு, ரோஜா, சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு தலைவர் விடுதலை, பிலிம்சேம்பர் தலைவர் கல¢யாண், நடிகர் சங்க பொருளாளர் வாகை சந்திரசேகர் மற்றும் ஏராளமான தென்னிந்திய மொழி திரைப்பட கலைஞர்கள், நடிகர்கள் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், பெப்சி உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment