இந்தி பட இயக்குனரும் தயாரிப்பாளருமான சுபாஷ் கய் நிறுவனத்தில் படம் இயக்குகிறார் பிரியதர்ஷன்.இதுபற்றி சென்னை ஃபோர் பிரேம்ஸ் தியேட்டரில் செய...
இந்தி பட இயக்குனரும் தயாரிப்பாளருமான சுபாஷ் கய் நிறுவனத்தில் படம் இயக்குகிறார் பிரியதர்ஷன்.இதுபற்றி சென்னை ஃபோர் பிரேம்ஸ் தியேட்டரில் செய்தியாளர்களை சந்தித்த சுபாஷ் கய் கூறும்போது, 'பிரியதர்ஷன் சிறந்த இயக்குனர். 81 படங்களை உருவாக்கியிருந்தாலும் ஒவ்வொரு படத்தையும் முதல் படம் போல் இயக்கி வருகிறார். 'காஞ்சிவரம்' மாதிரியான படம், காமெடி படம் என வித்தியாசமான படங்களை தருவதில் வல்லவர். நான் தயாரிக்கும் படத்தை அவர் இயக்குவது மகிழ்ச்சி. இப்போது கதை விவாதத்துக்காக வந்துள்ளேன்' என்றார்.
பிரியதர்ஷன் கூறும்போது, 'இளம் வயதிலேயே சுபாஷ் கய் படங்களை பார்த்து வளர்ந்தவன் நான். கமர்சியல் படங்களை எல்லா தரப்பு மக்களுக்கும் எப்படி கொண்டு சேர்ப்பது என்பதில் அவர் திறமையானவர். அவர் பாணியை நான் பின்பற்ற முயற்சித்து வருகிறேன். இப்போது அவர் தயாரிப்பில் இந்திப் படம் இயக்குவது பெருமையாக இருக்கிறது. யார் நடிக்கிறார்கள் என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை' என்றார்.
Comments
Post a Comment