வைரமுத்து மகன் திருமணம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news


வைரமுத்து, பொன்மணி வைரமுத்து தம்பதியரின் இளைய மகன் கபிலன். இவர், ஆஸ்திரேலியாவில் குவின்ஸ்லேந்து பல்கலைக்கழகத்தில் சமூகவியல் தகவல் தொடர்பு கல்வியில் பட்ட மேற்படிப்பு முடித்துள்ளார். குளோபல் மீடியா நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக பணியாற்றுகிறார். இவருக்கும் திருச்சி மாவட்ட நீதிபதி மு.மாயாண்டி, மதுரை யாதவர் மகளிர் கல்லூரி வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரியை அமுதா தம்பதியரின் மகள், டாக்டர் ரம்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் திருமணம், செப்டம்பர் 5&ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கில் நடக் கிறது. முதல்வர் கருணாநிதி, திருமணத்தை நடத்தி வைக்கிறார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட திரையுலகினர் பங்கேற்கின்றனர். வரவேற்பு செப்டம்பர் 8&ம் தேதி மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடக்கிறது.

Comments

Most Recent