நான்கு ஹீரோ கதைகளில் நடிப்பது ஏன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ராசு மதுரவன் இயக்கும் 'முத்துக்கு முத்தாக' படத்தில் நடிக்கிறார் ஹரீஷ். அவர் கூறியதாவது: இதற்கு முன் 'இது காதல் வரும் பருவம்', 'புகைப்படம்', 'மாத்தி யோசி', 'கோரிப்பாளையம்' படங்களில் நடித்தேன். இப்போது 'முத்துக்கு முத்தாக' படத்தில் விக்ராந்த், நட்ராஜ், பிரகாஷ், வீரசமர் ஆகியோருடன் நடிக்கிறேன். ஒரே படத்தில் பல ஹீரோக்களுடன் சேர்ந்து நடிப்பது வித்தியாசமான அனுபவம். இளவரசு, சரண்யாவின் மகனாக 'முத்துக்கு முத்தாக' படத்தில் நடிக்கிறேன். திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு வந்து, ஐ.டி கம்பெனியில் பணிபுரிகிறேன். எனக்கு ஜோடி, 'களவாணி' ஓவியா. ஏன் தனி ஹீரோவாக நடிக்கவில்லை என்று கேட்கிறார்கள். நல்ல சந்தர்ப்பம் அமையும்போது நடிப்பேன். அதற்காக நான் காத்திருந்தபோது, சிம்புதேவன் அசோசியேட் சரவணன், 'பி.சி' என்ற கதையை சொன்னார். 'பி.சிதம்பரம்' என்பதன் சுருக்கம் அது. தனி ஹீரோவாக நடிக்கிறேன். மீரா கதிரவன் இயக்கும் 'கொம்பன்' படத்திலும் ஹீரோவாக நடிக்கிறேன். இந்த படத்துக்காக கராத்தே கற்றுக்கொள்கிறேன்.

Comments

Most Recent