தாலியை விற்றாவது என் மகனை ஹீரோவாக்குவேன் என்று ஜெயசித்ரா கூறியுள்ளார். பழம்பெரும் நடிகை ஜெயசித்ரா இயக்கி தயாரிக்கும் படம், 'நானே என்ன...
தாலியை விற்றாவது என் மகனை ஹீரோவாக்குவேன் என்று ஜெயசித்ரா கூறியுள்ளார். பழம்பெரும் நடிகை ஜெயசித்ரா இயக்கி தயாரிக்கும் படம், 'நானே என்னுள் இல்லை'. இதில் அவரது மகன் அம்ரேஷ் கணேஷ், இசை அமைத்து ஹீரோவாக நடிக்கிறார். படம் பற்றி அம்ரேஷ் கணேஷ் கூறியதாவது:இசை அமைப்பாளராக வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். அம்மா இயக்கிய தொலைக்காட்சித் தொடரில் நான் நடித்ததைப் பார்த்து என்னை ஹீரோவாக்க அவர் ஆசைப்பட்டார். பல இயக்குனர்களிடம் முயற்சித்தும் சில காரணங்களால் முடியாமல் போகவே, தானே படம் இயக்க முடிவு செய்தார். சொந்தப் படம் வேண்டாம் என்று சொன்னேன். எவ்வளவு கஷ்டப்பட்டாலும், உன்னை ஹீரோவாக்குவேன் என்று உருக்கமாகக் கூறினார். பொறுப்புடன் இந்த படத்தில் நடித்திருக்கிறேன். அம்மாவின் கனவை நிறைவேற்றுவேன். அம்மாவே இயக்கியதால் காதல் காட்சிகளில் நெருங்கி நடிக்க முடியவில்லை. படத்தின் இசைத் தட்டை முதல்வர் கருணாநிதி வெளியிட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது.
Comments
Post a Comment