இயக்குனரானார் ஒளிப்பதிவாளர் பவன் சேகர்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news


ஏஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜி.ரவிகுமார், பி.பூங்கொடி தயாரிக்கும் படம், 'யுகம்'. ராகுல் மாதவ் ஹீரோ. தீப்தி ஹீரோயின். மற்றும் ரவிமரியா, சூப்பர் குட் லட்சுமணன், பாண்ட்ஸ் நடிக்கின்றனர். இசை, பொன்ராஜ். பாடல்கள், லலிதானந்த். படம் பற்றி இயக்குனர் பவன் சேகர் கூறியதாவது:மறைந்த ஜீவாவிடம் உதவியாளராக இருந்தேன். பிறகு 'ஆசை ஆசையாய்', 'அதே நேரம் அதே இடம்', 'சிந்தனை செய்' படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தேன். இப்போது 'யுகம்' படத்துக்கு ஒளிப்பதிவு செய்து இயக்குகிறேன். 60 வருடங்களை ஒரு யுகம் என்கிறோம். இப்படத்தின் ஹீரோ, ஹீரோயினின் வாழ்க்கையில் சந்தேகம் என்ற விதை, மிகப் பெரிய விருட்சமாக உருவெடுக்கிறது. இதனால், ஒவ்வொரு கணமும் அவர்களுக்கு யுகமாக நகர்கிறது. அவர்கள் வாழ்க்கை எப்படி சீரழிகிறது என்பதை சொல்கிறேன்.

Comments

Most Recent