முக்கிய வேடத்தில் கோவேறு கழுதை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

'அழகர்சாமியின் குதிரை’ படத்தை 'வெண்ணிலா கபடி குழு’ இயக்குனர் சுசீந்திரன் இயக்கி வருகிறார். படம் பற்றி அவர் கூறியது: பாஸ்கர் சக்தி எழுதிய 'அழகர்சாமியின் குதிரை’ என்ற குறுநாவலை அதே பெயரில் படமாக்கி வருகிறேன். இதற்காக திரைக்கதை அமைத்து பல்வேறு கதாபாத்திரங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
‘வெண்ணிலா கபடி குழு’வுக்கு பின் மீண்டும் கிராமத்து மண்ணுக்குள் கால் பதித்திருக்கிறேன். சோத்துப்பாரை, அகமலை போன்ற பகுதிகளில்
ஷூட்டிங் நடக்கிறது. 40 நாட்கள் ஷூட்டிங் நடத்தி முடித்துள்ளேன். பொதி சுமப்பதுதான் கோவேறு கழுதையின் வாழ்க்கை. ஹீரோ அப்புக்குட்டியின் வாழ்வாதாரமாக இருக்கிறது இந்த கோவேறு கழுதை. இது குதிரையைப் போலவே இருக்கும். படத்தில் இதற்கு முக்கிய கேரக்டர். இதன் உடல்நலனை
பாதுகாக்க கூடவே ஒரு டாக்டரும் இருக்கிறார். அழகான ஒரு பெண் கதைக்கு தேவைப்பட்டார். ‘வெண்ணிலா கபடி குழு’ நாயகி சரண்யா மோகன்
பொருத்தமாக இருந்தார். அவரையே தேர்வு செய்தேன்.

Comments

Most Recent