‘கட்டா மிட்டா’ படம் மூலம் இந்தியில் அறிமுகம் ஆனார் த்ரிஷா. இப்படத்தை இந்தி நடிகர் அக்ஷய் குமார் நடித்து, தயாரித்திருந்தார். 'கட்டா மிட...
‘கட்டா மிட்டா’ படம் மூலம் இந்தியில் அறிமுகம் ஆனார் த்ரிஷா. இப்படத்தை இந்தி நடிகர் அக்ஷய் குமார் நடித்து, தயாரித்திருந்தார். 'கட்டா மிட்டா' உட்பட அவரது நிறுவனம் தயாரிக்கும் 3 படங்களில் நடிக்க த்ரிஷாவை அக்ஷய் ஒப்பந்தம் செய்திருந்தார். இந்நிலையில் ‘கட்டா மிட்டா’ படம் எதிர்பாராத தோல்வியை சந்தித்தது. இதில் அக்ஷய்க்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் படங்கள் தயாரிக்கும் திட்டத்தை அவர் தள்ளிப் போட்டுள்ளாராம். இதையடுத்து அக்ஷய் குமாரின் படங்களில் த்ரிஷா நடிக்க போடப்பட்ட ஒப்பந்தமும் ரத்தாகிவிட்டதாக பாலிவுட்டில் தகவல் பரவியுள்ளது. இதனால்தான் உடனடியாக தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக நடிக்க அவர் கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.
Source: Dinakaran

Comments
Post a Comment