'யக்ஷயும் ஞானும் மலையாள பட தயாரிப்பாளர் ரூபன் கோமெஸ், இயக்குனர் வினயனை தாக்கி அளித்த பேட்டியால் பரபரப்பு ஏற்பட்டது. ஒன்றரை கோடி ரூபாய்...
'யக்ஷயும் ஞானும் மலையாள பட தயாரிப்பாளர் ரூபன் கோமெஸ், இயக்குனர் வினயனை தாக்கி அளித்த பேட்டியால் பரபரப்பு ஏற்பட்டது. ஒன்றரை கோடி ரூபாய் செலவில் படத்தை முடித்து தருவதாக முதலில் கூறினார் வினயன். ஆனால் படத்தை ரிலீஸ் செய்வதற்குள் ரூ. 3 கோடி செலவு இழுத்துவிட்டார். இப்படத்தால் எனக்கு ரூ.1.37 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றவர், மலையாள இயக்கு னர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அமைப்பின் பொதுச் செயலாளரான டைரக்டர் உன்னி கிருஷ் ணனை அடியாட்களை வைத்து தாக்கும்படியும் வினயன் கூறினார் என பரபரப்பை ஏற்படுத்தினார்.இது பற்றி வினயன் கூறும்போது, 'உன்னி கிருஷ்ணனை தாக்கும்படி நான் கூறவில்லை. அவர்தான் ஷூட்டிங்கின்போது செட்டுக்கு வந்து உன்னிகிருஷ்ணனை தாக்க வேண்டும் என்றார். அவர்களுக்குள் ஏதோ பிரச்னை என நினைக்கிறேன். இப்போது சூப்பர் ஸ்டார் நடிகரின் கால்ஷீட்டை வாங்கி இருக்கிறார் ரூபன். அந்த சூப்பர் ஸ்டார் எனக்கு எதிரி. அதனால் அந்த நடிகரை சந்தோஷப்படுத்த, என் மீது குற்றச்சாட்டு சொல்லிக்கொண்டிருக்கிறார் என்றார்.
Source: Dinakaran

Comments
Post a Comment