பெற்றோர் சம்மதம் வாங்க கஷ்டப்பட்டார் பிரகாஷ்ராஜ் பற்றி போனி வர்மா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பிரகாஷ்ராஜ், டான்ஸ் மாஸ்டர் போனி வர்மாவை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். காதல் மலர்ந்தது பற்றி போனி வர்மா கூறியதாவது:
மும்பை ஸ்டுடியோவில் இந்தி படத்திற்கு நடனம் அமைக்க சென்றேன். யூனிட்டில் உள்ளவர்கள் பிரகாஷ்ராஜ் வருகிறார் என படபடப்பானார்கள். அவர் வருவதை தூரத்திலிருந்து பார்த்த நான், 'யார் இந்த வயதான ஆள்?Õ என அருகில் இருந்தவர்களிடம் கேட்டேன். 5 வருடத்துக்கு முன்பு இப்படிக் கேட்ட நான், இன்றைக்கு அவரது மனைவி.முதல் சந்திப்பில் இருவரும் செல்போன் எண்களை பறிமாறிக் கொண்டோம். அடிக்கடி பேசுவோம். அதுவே காதலாக மலர்ந்தது. திருமணம் செய்ய முடிவு செய்தபோது, 'முறைப்படி வீட்டுக்கு வந்து பெண் கேளுங்கள்Õ என்றேன். என் பெற்றோரிடம் சம்மதம் பெறுவதில்தான் அவர் நிறைய கஷ்டப்பட  வேண்டி இருந்தது. ஒரு கட்டத்தில் அவரது அப்ரோச் என் அப்பா, அம்மாவுக்கு பிடித்துவிட¢டது. உடனே திருமணத்துக்கு பச்சை கொடி காட்டினார்கள். டெக்னீஷியன்களை மதிக்க தெரிந்தவர் பிரகாஷ். சினிமா சம்பந்தப்பட்ட நிறைய விஷயங்களை தெரிந்து வைத்திருக்கிறார். இது எல்லாம் அவரிடம் எனக்கு பிடித்தவை.இவ்வாறு போனி வர்மா கூறினார்.


Source: Dinakaran

Comments

Most Recent