நடிகர் மன்சூர் அலிகான் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் 140 படங்களில் நடித்துள்ளேன். வியாஸ் தமிழ், த...
நடிகர் மன்சூர் அலிகான் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் 140 படங்களில் நடித்துள்ளேன். வியாஸ் தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் இயக்கும் 'ரதம்' படத்தில், செருப்பு தைக்கும் தொழிலாளி வேடத்தில் நடிக்கிறேன். இதுவரை இப்படியொரு வேடம் ஏற்றதில்லை. எனது கெட்டப் வித்தியாசமாக இருக்கும். ஹீரோவுக்கு அப்பாவாக வருகிறேன். செருப்பு தைப்பவன் என்றாலும், ஷேக்ஸ்பியரை முழுவதுமாக கரைத்துக் குடித்தவன். இப்போது 'விருதகிரி', 'புலி வேஷம்', 'அனுபவி ராஜா அனுபவி', 'தில்லுமுல்லு' படங்களில் நடிக்கிறேன். என்னைக் கவரும் கதையுடன் இயக்குனர் வந்தால், மீண்டும் படம் தயாரிக்க தயார். டைரக்ஷனில் ஈடுபடும் எண்ணம் இல்லை. மீண்டும் அரசியலில் குதிக்கும் ஆசையும் இல்லை.
Source: Dinakaran
Source: dinakaran-kolly

Comments
Post a Comment