ஜெனிலியாவுக்கு டிப்ஸ் கொடுத்த பிரபுதேவா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

'நயன்தாராவை மணப்பேன்' என்று மும்பையில் நடந்த 'உருமி' ஷூட்டிங்கின்போது சமீபத்தில் அறிவித்தார் பிரபுதேவா. இதையடுத்து அந்த ஷூட்டிங்கில் இருந்த பிருத்விராஜ், ஜெனிலியா, நித்யா மேனன் போன்றவர்கள் அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.நட்சத்திர கூட்டத்தில் ஜொலித்த யூனிட்டில் எப்போதும் கலகலப்பு. ஒரு வரி கதைகள் சொல்லி அனைவரையும் அசத்தினார் பிரபு தேவா. அவரது பேச்சில் மயங்கிய நடிகைகள் மெய்மறந்து அவரது முகபாவனைகளை உன்னிப்பாக கவனித்த வண்ணம் இருந்தனர். மேலும் நடன அனுபவத்தை பிரபு தேவா சொல்லத் தொடங்கியவுடன் ஜெனிலியாவும், நித்யா மேனனும் அவரை சூழ்ந்து கொண்டனர். இடுப்பை வளைத்து ஆடுவது, கால் விரல்களை தரையில் பேலன்ஸ் செய்து ஆடுவது போன்ற அசைவுகளில் நடிகைகளுக்கு சந்தேகம் எழுந்ததால் அதை எப்படி ஆடுவது என்று டிப்ஸ் கேட்டு தொந்தரவு செய்தார்களாம். மூவருக்கும் சளைக்காமல் டிப்ஸ் கொடுத்து அசத்தினார் பிரபு தேவா.


Source: Dinakaran


Source: India Glitz

Comments

Most Recent