'எந்த ஹீரோயினையும் காதலிக்கவில்லை' என்றார் ஆர்யா. அவர் மேலும் கூறியதாவது: 'பாஸ் என்கிற பாஸ்கரன்' முழு திருப்தி அளித்துள்ளத...
'எந்த ஹீரோயினையும் காதலிக்கவில்லை' என்றார் ஆர்யா. அவர் மேலும் கூறியதாவது: 'பாஸ் என்கிற பாஸ்கரன்' முழு திருப்தி அளித்துள்ளது. அடுத்து 'சிக்கு புக்கு' ரிலீஸ். இதன் தயாரிப்பாளருக்கும், எனக்கும் இருந்த கருத்து வேறுபாடு தீர்ந்து விட்டது. பாலா இயக்கும் 'அவன் இவன்' ஷூட்டிங் நடந்து வருகிறது. அவரது 'நான் கடவுள்' பாணியில், மீண்டும் அடர்த்தியான தாடி, மீசையுடன் நடிக்க ஆசை. முடி வளர்ப்பது சிரமமான விஷயமாக தெரியவில்லை. 'நான் கடவுள்' படத்தில் நான் தோன்றியிருந்த ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
புதிய கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வர, தி ஷோ பீப்பிள் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளேன். முதலில், சுகா டைரக்ஷனில் 'படித்துறை' படத்தை தயாரிக்கிறேன். புதுமுகங்கள் நடிக்கின்றனர். கதைக்கு நான் தேவைப்படாத காரணத்தால், அதில் நடிக்கவில்லை. தொடர்ந்து படம் தயாரித்து, பலரை அறிமுகம் செய்வேன். ஹீரோவாக நடிப்பதால், என்னைப்பற்றி நிறைய கிசுகிசு வருகின்றன. சில கிசுகிசுக்கள் சுவாரஸ்யமாகவும் இருக்கும். பெரும்பாலும் அவை என் வளர்ச்சிக்கு உதவியாகவே இருக்கின்றன.வீட்டில், 'எப்ப கல்யாணம் பண்ணிக்க போறே?' என்று கேட்கிறார்கள். இப்போது அவசரம் இல்லை. எத்தனையோ பெண்களை பார்க்கிறோம், பேசுகிறோம், பழகுகிறோம். இதில் பார்த்தவுடனே என் மனதை கவரும் பெண்ணை திருமணம் செய்வேன். கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கட்டாயத்துக்காக பெண் தேட முடியாது. என்னுடன் சேர்ந்து நடிக்கும் எந்த ஹீரோயினுடனும் இதுவரை காதல் வந்தது இல்லை.
Source: Dinakaran
Source: India Glitz
Comments
Post a Comment