உருமியில் தபு நடனம்

http://www.newsofap.com/uploaded_files/news_img/newsofap.com4c7d230195afdTabugood.jpg
வாரத்துக்கு இரண்டு கதைகள் கேட்பது தபுவின் வழக்கம். அப்படிக் கேட்டும் எந்த ஒரு படத்தையும் எளிதில் ஒப்புக் கொள்ள மாட்டார். இப்படி ஹிந்தியில் பல படங்களை அவர் மறுத்திருக்கிறார். விருதுக்குரிய படங்களிலேயே அவரை அதிகம் பார்க்க முடியும். இந்நிலையில் வெறும் ஒரு பாட்டுக்கு ஆட தபு சம்மதித்துள்ளார். தமிழ், மலையாளம், ஹிந்தியில் உருவாகும் "உருமி' படத்துக்காக. ஏன் தெரியுமா?

÷"இந்தப் பட இயக்குநர் சந்தோஷ் சிவன் என் நண்பர். அதுவுமில்லாமல் இந்திய சினிமாவில் முக்கியமான இடம் வகிப்பவர். அவரது படங்களைப் பார்த்திருக்கிறேன். அவருடன் சேர்ந்து பணியாற்ற காத்திருந்தேன். இதில் ஒரு பாடல் என்றாலும், அது கதைக்கு மிகவும் அவசியமானது. சந்தோஷ் சிவனுக்காக மட்டுமே இதில் ஒரு பாடலுக்கு ஆட சம்மதித்தேன்' என்றார் தபு.

Comments

Most Recent