சுதந்திர போராட்ட பெண் தியாகி நடித்த படம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மகாத்மா காந்தி மீண்டும் பிறந்து வந்தால் அவர் நாட்டின் பிரச்னைகளை எப்படி கையாள்வார் என்ற கருவை கொண்டு உருவாகிறது 'முதல்வர் மகாத்மாÕ. 'காமராஜ்Õ படத்தை இயக்கிய பாலகிருஷ்ணன் இயக்குகிறார். அவர் கூறியதாவது: முழுக்க காந்தியின் சிந்தனை, வழிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இப்படம் உருவாகிறது. இதில் இந்தி நடிகர் அனுபம் கெர் முதல்வர் வேடம் ஏற்று நடிக்கிறார். இவர் நடித்த காட்சி சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் படமாக்கப்பட்டது. அவருடன் செங்கல்பட்டுவை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் நடித்தார். இவர் சிறு வயதிலேயே காந்தி நடத்திய சுதந்திர போராட்டங்களில் பங்கேற்றதுடன், வினோபா பாவேயின் பூமி தான இயக்கத்திலும் சேர்ந்து தொண்டாற்றியவர். சமூக சேவைக்காக பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார். இப்போது அவருக்கு 90 வயதாகிறது. இதில் காந்தி வேடத்தில் கனகராஜ் நடிக்கிறார். காந்தி போன்றே தோற்றம் கொண்ட இவர் ஏற்கனவே 'காமராஜ்Õ படத்திலும் காந்தி வேடமேற்று நடித்தவர்.


Source: Dinakaran


Source: India Glitz

Comments

Most Recent