தமிழிலிருந்து தெலுங்குக்கு சென்றார் சார்மி. அங்கு கவர்ச்சி நடிப்பால் முன்னணிக்கு வந்தார். அனுஷ்கா, இலியானா, ஜெனிலியா வரவுக்கு பின் சார்மிய...
தமிழிலிருந்து தெலுங்குக்கு சென்றார் சார்மி. அங்கு கவர்ச்சி நடிப்பால் முன்னணிக்கு வந்தார். அனுஷ்கா, இலியானா, ஜெனிலியா வரவுக்கு பின் சார்மியின் மார்க்கெட் சரிந்தது. அவரை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னணி இடத்துக்கு இவர்கள் பறந்தனர். இழந்த மார்க்கெட்டை பிடிக்க போராடிக்கொண்டிருந்தார் சார்மி. இந்த நேரத்தில் 'பலே தொங்கலு' என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். இப்போது நாகார்ஜுனா நடிக்கும் 'ராகதா' என்ற படத்திலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடவே வாய்ப்பு வந்திருக்கிறதாம். சம்பளமும் குறைவு. படத்தில் ஹீரோயின்களாக நடிப்பது அனுஷ்காவும், பிரியாமணியும்தான். இவ்வளவு ரிஸ்க் இருந்தும் பெரிய படம் என்பதால் எப்படியாவது மார்கெட் சூடுபிடித்தால் போதும் என்கிறாராம் சார்மி. அதனால் இப்படத்துக்காக ஒரு பாட்டுக்கு ஆடி முடித்திருக்கிறார்.
Source: Dinakaran

Comments
Post a Comment