ஜெயம் ரவி ஜோடியானார் நீது

http://mimg.sulekha.com/tamil/aadhi-bhagavan/aadhi-bhagavan_m.jpg
'யாவரும் நலம்' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் இந்தி நடிகை நீது சந்திரா. அடுத்து 'தீராத விளையாட்டுப் பிள்ளை' படத்தில் நடித்தார். இதையடுத்து, ஒரு பாடலுக்கு மட்டும் அவர் நடனம் ஆடியுள்ள படம், 'யுத்தம் செய்'. மிஷ்கின் இயக்கத்தில் சேரன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், இயக்குனர் அமீர், எழுத்தாளர் சாரு நிவேதிதா ஆகியோருடன் இணைந்து நீது சந்திரா ஆடியுள்ளார். தற்போது அமீர் இயக்கும் 'ஆதி பகவன்' படத்தில், ஜெயம் ரவி ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே இப்படத்தின் ஷூட்டிங் பாங்காக்கில் நடந்தது. இதில் ஜெயம் ரவி, சுதா சந்திரன், தெலுங்கு நடிகை கர்ணா நடித்த காட்சிகள் படமானது. இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் பாங்காக்கில் படப்பிடிப்பு நடத்த சென்றுள்ளார் அமீர். அங்கு ஜெயம் ரவி, நீது சந்திரா நடிக்கும் காட்சிகள் படமாகின்றன. ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். 40 நாட்களுக்கு மேல் பாங்காக்கில் படப்பிடிப்பு நடக்கிறது.


Source: Dinakaran


Source: India Glitz

Comments

Most Recent