மோகன்லால் நடிக்கும் படத்தை சமுத்திரகனி இயக்குகிறார். மோகன்லால் நடித்துள்ள சிகார் என்ற மலையாள படத்தில் நக்சலைட்டாக நடிக்கிறார் சமுத்திரகனி....
மோகன்லால் நடிக்கும் படத்தை சமுத்திரகனி இயக்குகிறார். மோகன்லால் நடித்துள்ள சிகார் என்ற மலையாள படத்தில் நக்சலைட்டாக நடிக்கிறார் சமுத்திரகனி. இதையடுத்து மோகன்லாலிடம் சமுத்திரகனி கதை ஒன்றை சொன்னார். அதை கேட்டு நடிக்க சம்மதித்துள்ளார். இதுபற்றி சமுத்திரகனியிடம் கேட்டபோது, "சிகார் படத்தில் என் கேரக்டரை மோகன்லால் உட்பட எல்லோரும் பாராட்டினார்கள். இயக்குனர் நடிகராகும் போது கேரக்டராகவே மாறிவிடுகிறீர்கள் என்றார். அப்போது அவருக்கு அவுட்லைன் சொன்னேன். பிடித்திருக்கிறது என்றார். ஆனால், இன்னும் இரண்டு வருடத்துக்கு அவர் பிசி. நான் இப்போது சசிகுமார் படத்தில் நடித்துவருகிறேன். இதையடுத்து வெற்றிமாறன் இயக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறேன். இதையெல்லாம் முடித்துவிட்டு மோகன்லாலை இயக்குவேன்" என்றார்.
Source: Dinakaran

Comments
Post a Comment