இளைய மகள் திருமணம் :ரசிகர்களுக்கு ரஜினி வேண்டுகோள்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா-தொழிலதிபர் அஸ்வின் திருமணம் சென்னையில் நாளை நடக்கிறது. இதுதொடர்பாக ரஜினிகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: என்னுடைய இளைய மகள் சவுந்தர்யா -அஸ்வின் திருமணத்துக்கு ரசிகர்கள் நேரடியாக வந்து பார்க்க வேண்டும்; வாழ்த்த வேண்டும் என விரும்புகிறார்கள். நல்ல எண்ணத்துடன் தொலைபேசி மூலமாகவும் தபால் மூலமாகவும் ரசிகர்கள் தரும் தகவல், எனக்கு வந்து கொண்டு இருக்கிறது.
ரசிகர்கள் அனைவரையும் அழைப்பதற்கு ஆசையாக இருந்தாலும், இடநெருக்கடி காரணமாகவும் போக்குவரத்து இடையூறுகளை கருதியும், உங்களை அழைக்க முடியவில்லை என மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். மணமக்களுக்கு உங்களுடைய நல்லாசிகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ரஜினி கூறியுள்ளார். சவுந்தர்யா-அஸ்வின் நிச்சயதார்த்தம், சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில் இன்று மாலை நடக்கிறது. அதே மண்டபத்தில் நாளை காலை திருமணம் நடக்க உள்ளது. மாலையில், வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.

Comments

Most Recent