சர்ச்சைக்குரிய திருமண காட்சி மிட்டாய் படத்துக்கு எதிர்ப்பு!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news


'பி' டீம் நிறுவனம் தயாரிக்கும் படம், 'மிட்டாய்'. இப்படத்தில் இடம்பெறும் திருமண காட்சிக்கு, கொல்கத்தா தமிழ்ச் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுபற்றி அப்படத்தின் இயக்குனர் எம்.எஸ்.அன்பு நிருபர்களிடம் கூறியதாவது: சந்தோஷ், பிரபா, உன்னிமாயா மூவரும் ஒரே கல்லூரியில் படிப்பவர்கள். ஒரு திடீர் சூழ்நிலை, அவர்களை காதலிக்க வைக்கிறது. உன்னிமாயா என்ன முடிவு எடுக்கிறார் என்பது, இதுவரை எந்த படத்திலும் வராத கிளைமாக்ஸ். இந்த கிளைமாக்ஸ் பெரிய சர்ச்சையை, பரபரப்பை ஏற்படுத்தும்.

இப்படத்தின் போஸ்டரில், 'ஒரு பெண் முடிவெடுத்து விட்டால், யார் என்ன செய்துவிட முடியும்? சுதந்திரத்தை கொண்டாடுவோம்' என்ற வாசகங்களை இடம்பெற வைத்து, திருமணக்கோலத்தில் உன்னிமாயாவுடன் சந்தோஷ், பிரபா இருக்கும் படத்தை வெளியிட்டிருந்தோம். இதற்கு தமிழகத்திலுள்ள சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. கொல்கத்தா தமிழ்ச்சங்கம் கடுமையாக எதிர்த்துள்ளது. போனில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்கள். தமிழிலும், தெலுங்கிலும் இம்மாதம் இதே பெயரில் படம் ரிலீஸாகிறது.

Comments

Most Recent