த்ரிஷாவுடன் முத்தக் காட்சி பவன் கல்யாண் மறுப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

இந்தியில் வெற்றி பெற்ற 'லவ் ஆஜ் கல் படம், தெலுங்கில் ரீமேக் ஆகிறது. பவன் கல்யாண், த்ரிஷா ஜோடியாக நடிக்கின்றனர். இந்தியில் சைப் அலிகான், தீபிகா படுகோனே இருவரும் நடித்த லிப் டு லிப் முத்தக் காட்சி பரபரப்பாக பேசப்பட்டது. இந்த காட்சியை தெலுங்கிலும் வைக்க முடிவு செய்த இயக்குனர் ஜெயந்த் பரன்ஜி, அதுபற்றி ஹீரோயின் த்ரிஷாவிடம் கூறியபோது நடிக்க ஒப்புக்கொண்டார். பவன் கல்யாணிடம் முத்தக் காட்சி பற்றி கூறியதும், 'அதெல்லாம் வேண்டாம் என்று மறுத்துவிட்டார். 'இது படத்தில் திருப்புமுனை ஏற்படுத்தும் காட்சி. இதில் நடிக்க த்ரிஷா ஒப்புக் கொண்டுவிட்டார். நீங்கள் தயக்கம் இல்லாமல் நடிக்கலாம் என்று இயக்குனர் மீண்டும் வற்புறுத்தியபோது, 'என்னுடைய வயதுக்கு இது போன்ற முத்தக் காட்சியில் நடித்தால் நன்றாக இருக்காது. எனவே இந்த காட்சியை தவிர்த்து விடுங்கள். எனது அண்ணன் சிரஞ்சீவி அரசியலில் இருக்கிறார். நானும் கட்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். முத்தக் காட்சியில் நடித்தால் இமேஜ் பாதிக்கும் என மறுத்துவிட்டாராம் பவன். இதற்கு பதிலாக வேறு காட்சியை யோசிக்கும்படி இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளாராம் பவன். இதையடுத்து என்ன காட்சி வைக்கலாம் என ரூம் போட்டு யோசித்து வருகிறார் இயக்குனர்.


Source: Dinakaran

Comments

Most Recent