நடிப்பில் கவனம் செலுத்துகிறேன் : எஸ்.பி.சரண்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறேன் என்று எஸ்.பி.சரண் கூறினார். மேலும் அவர் கூறியதாவது: அப்பாவைப்போல இசைதான் எனக்கு அறிமுகம். அதன் பிறகு படத் தயாரிப்பு, நடிப்பு என்று எனது களம் விரிந்தது. இப்போது நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறேன். முதலில் ஜாலிக்காக ஆரம்பித்து பிறகு நண்பர்களுக்காக நடித்து, இப்போது அதில் அதிக ஈடுபாடு வந்துவிட்டது. எனக்கேற்ற கேரக்டர்களோடு நிறைய கதைகள் வருகிறது. அவற்றில் நல்லவற்றை தேர்ந்தெடுத்து நடிப்பேன். ஹீரோவாக நடிப்பீர்களா? என்றும் கேட்கிறார்கள். தயாரிப்பாளரும், இயக்குனரும் ரிஸ்க் எடுத்தால் நான் தயார்தான். இன்றைய காலகட்டத்தில் கதைதான் ஹீரோ. அந்த கதைக்கேற்ற கேரக்டர்களில் பொருத்தமானவர்கள் யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். நடிப்பில் முழுகவனம் செலுத்தினாலும் இசையிலும் கவனமாக இருப்பேன். அதை ஒருபோதும் கைவிட மாட்டேன். படத் தயாரிப்பிலும் பின்வாங்கிவிடவில்லை. விரைவில் அடுத்த படம் பற்றி அறிவிப்பேன்.


Source: Dinakaran

Comments

Most Recent